கப்பிட்டல் கோபுரம், சிங்கப்பூர்
கப்பிட்டல் கோபுரம், சிங்கப்பூர் நகரத்தில் உள்ள நான்காவது உயரமான வானளாவி ஆகும். இது 254 மீட்டர் உயரமானது. தொடக்கத்தில், பி.ஓ.எஸ் வங்கியின் தலைமையகமாக வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடம் பின்னர் "கப்பிட்டல்லாண்ட்" நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது. இது அந் நிறுவனத்தின் முக்கியமான கட்டிடமாக மாறியதுடன் அந் நிறுவனத்தின் பெயரே கட்டிடத்துக்கும் இடப்பட்டது. 2000 ஆவது ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இக் கட்டிடம் இது அமைந்துள்ள சென்ட்டன் வே-தஞ்சோங் பாகர் பகுதியில் மிக உயர்ர்ந்த கட்டிடமாகவும் விளங்குகிறது.
Read article